மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் : இருவர் கைது

மதுரைக்கு இருசக்கர வாகனத்தில்  கஞ்சா கடத்தல் : இருவர் கைது
X
மதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவர்கள்.
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த இருவரை மதுரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில், கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது., இந்நிலையில், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை ரகசியமாக தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், தனிப்படை போலீசார் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பட்டி எனும் பகுதியில் பிரபல கஞ்சா வியாபாரிகள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததை கண்டு அவர்களது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் 12.5 கிலோ கஞ்சாவை பதுக்கி கேரளாவிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

கஞ்சாவை கடத்தி வந்த வியாபாரிகள் பேரையூரை சேர்ந்த ஜெயா மற்றும் காரைக்குடியை சேர்ந்த சேகர் ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது.,இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் அவர்களிடமிருந்து 12.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.23, ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!