சோழவந்தான் பகுதியில் பெய்த பலத்த மழையால் மரங்கள் முறிந்து சேதம்

சோழவந்தான் பகுதியில் பெய்த பலத்த மழையால்  மரங்கள் முறிந்து சேதம்
X

சோழவந்தான் அருகே ராயபுரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்தது மின்கம்பங்கள்  சேதமடைந்தன

சோழவந்தான் அருகே ராயபுரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்தது மின்கம்பங்கள் மீது விழுந்து சேதம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்தது மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தன.

சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று பலத்த காற்றுடன் வீசிய கோடை மழையின் காரணமாக மின்சார கம்பங்கள் ஒடிந்தது .நேற்று இரவு முதல் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. வீடுகளின் மேல் கூரை இடிந்து பக்கவாட்டுச் சுவர்களில் இடிந்தும் பலத்த சேதமடைந்துள்ளது. விவசாயி ஒருவரின் மாட்டு கொட்டகை முழுவதுமாக இடிந்து போனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி ,கிராம நிர்வாக அலுவலர் முத்துராமன், ஊராட்சி செயலர் விக்னேஷ் சேதப் பகுதிகளை பார்வையிட்டு அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!