சோழவந்தான் அருகே தென்கரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சோழவந்தான் அருகே தென்கரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
X

சோழவந்தான் அருகே தென்கரை தனியார் மண்டபத்தில்,  முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

சோழவந்தான் அருகே தென்கரையில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

சோழவந்தான் அருகே தென்கரையில், மதுரை யாதவர் கல்லூரியில் 1980-83 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் சேர்மன் உதயகுமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் முத்தையா முன்னிலை வகித்தார்.

பொறியாளர் தியாகராஜன் வரவேற்றார். இதையடுத்து மாணவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் முக்கிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இம்மாணவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி பலர் ஓய்வு பெற்றுள்ளனர். மேலும், சிலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். சிலர் அரசியல்வாதிகளாகவும் உள்ளனர்.

இதில், கலந்து கொண்ட 50 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், முன்னாள் திமுக எம்.எல்.ஏ மதியரசன், பி.ஆர்.ஓ.ராதா, ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி சேது செல்வம் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவ மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

Tags

Next Story