ஓட்டுநர் குடும்பத்துக்கு கறவை மாடு வழங்கிய ஓட்டுநர் சங்கத்தினர்

ஓட்டுநர் குடும்பத்துக்கு கறவை மாடு வழங்கிய ஓட்டுநர் சங்கத்தினர்
X

சோழவந்தான் அருகே மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு கறவை மாடு வழங்கிய சங்க நிர்வாகிகள் 

தங்களுடன் பணியாற்றிய உயிரிழந்த நண்பரின் குடும்பத்திற்கு அனைவரும் இணைந்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறையை சேர்ந்தவர் ரவி . இவர் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். மரணம் அடைந்த ரவி, செவன் ஸ்டார் அனைத்து வாகன ஓட்டுனர் வாழ்வுரிமை சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், மரணம் அடைந்த செய்தி கேட்ட சங்க நிர்வாகிகள் அவரது குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு சங்க நிர்வாகிகள் சார்பாக ஓட்டுனர் ரவியின் மனைவி யிடம் கறவை மாடு மற்றும் மளிகை சாமான்கள் வழங்கினர்.

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன், ஓட்டுநர் சங்க மாநிலத் தலைவர் பொன் சரவணன், மாநில செயலாளர் கிருஷ்ணகுமார், மாநில பொருளாளர் ரியாசுதீன் ,மாநில தலைமை பேச்சாளர் வீரமணி, துணைத் தலைவர்கள் மகேஸ்வரன், ரஜினி, துணைச் செயலாளர்கள் முருகேசன், சூரியதேவன், துணை பேச்சாளர்கள் ராமநாதகிருஷ்ணன், முருகேசன் ,துணை ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணதாசன், கார்த்திக் ,துணை ஆலோசகர் தங்கராஜ், மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்களுடன் பணியாற்றிய உயிரிழந்த சக நண்பரின் குடும்பத்திற்கு அனைவரும் இணைந்து உதவி செய்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Tags

Next Story