மதுரைக்கு வருகை தரும் தமிழக ஆளுநர் : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
மதுரை காமராஜர் பல்கலையில் ஆர்ப்பாட்டம்.
மதுரையில் நாளை பட்டமளிப்பு விழாவிற்காக மதுரை வருகிறார் தமிழக ஆளுநர் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - பட்டமளிப்பு விழாவில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை - பல்கலைகழக நிர்வாகம் உத்தரவு:
பரபரப்பான சூழ்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ரவி நாளை மதுரை வருகை தரவுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிநெட் மற்றும் சிண்டிகேட் முடிவின் படி சுதந்திரப் போராட்ட வீர சங்கரையா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரை செய்ததை ரத்து செய்த ஆளுநர் இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் என, சர்ச்சை கிளம்பியுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் நேரடியாக அழைப்பிதழ் வழங்காமல், அலுவலகத்தில் கொடுத்து சென்றுள்ளதால், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பு செய்வார் என,தெரிகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கலந்து கொள்ள வருகைதரும் தமிழர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை, கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ஆளுநர் வருகையை முன்னிட்டு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவின் போது, அழைப்பிதழ் உள்ளவர்களுக்கே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் போது, அணிவகுப்பினர் மன்றத்தினுள் நுழையும்போது அனைவரும் எழுந்து நின்று அணிவகுப்பினர் அமர்ந்த பின்னர் அமர வேண்டும்.
பட்டமளிப்பு விழா முடிவில் நாட்டுப்பண் முடிந்து, அணிவகுப்பினர் மன்றத்தில் இருந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், அலைபேசிக்கு அனுமதி கிடையாது என பல்கலை நிர்வாகம் அறிவத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu