உசிலம்பட்டி அருகே மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவலம்..!

உசிலம்பட்டி அருகே மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவலம்..!
X

உசிலம்பட்டி அருகே, மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்

உசிலம்பட்டி அருகே போதிய கட்டிட வசதி இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயிலும் அவலம் ஏற்பட்டுளளது.

உசிலம்பட்டி:

மதுரை, உசிலம்பட்டி அருகே, பள்ளி கட்டிடம் இல்லாததால், மரத்தடியில் மாணவ மாணவிகள் கல்வி பயிலும் அவல நிலை நீடித்து வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட, மெய்ணுத்துபட்டி சங்கரலிங்காபுரம் கிராமத்தில், கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக அரசு ஆதிதிராவிட நல ஆரம்ப்பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளியின் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால், ஓர் ஆண்டுக்கு முன் இந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓர் ஆண்டு ஆகியும் மீண்டும் புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை என, கூறப்படுகிறது.

இதனால், இப்பள்ளியில் பயிலும் சுமார் 66 மாணவ மாணவிகள் மரத்தடியில் கல்வி பயிலும் அவல நிலை நீடித்து வருகிறது. புதிய கட்டிடம் கட்டித் தர பலமுறை ஆதிதிராவிட நலத்துறையிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கைகளும் இல்லை என, கூறப்படுகிறது.மழைக் காலங்களில், மாணவ மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும்,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் பள்ளிக்கட்டிடம் கட்டித் தர நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பல அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உருவாக்கப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வரும் இந்த காலகட்டத்தில் ஒரு அரசு பள்ளி கட்டிடம் இல்லாமல் இருப்பது மாணவர்களின் சேர்க்கையை குறைத்துவிடும் அபாயம் உல்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடி கவனம் செலுத்தி மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தரவேண்டும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திவரும் தமிழக அரசு இந்த பள்ளி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!