சோழவந்தான் பகுதிகளில் பால் நிறுத்த போராட்டம்

சோழவந்தான் பகுதிகளில் பால் நிறுத்த போராட்டம்
X

போராட்டம் குறித்த சுவரொட்டி

போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்த நிலையில், அதனையும் மீறி போராட்டம் தொடர்கிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் அரசின் எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம். நடைபெற்று வருகிறது.

தமிழகத்தி ல்ஆவின் பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு 7ரூபாய் உயர்த்தி அறிவிக்க கோரி, பால் முகவர்கள் சங்கம் சார்பில் ஆவின் பால்பண்ணைக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் இன்று முதல் நடைபெற்று வருகிறது

மதுரை மாவட்டம் சோழவந்தான், திருமங்கலம்,உசிலம்பட்டி, திருமங்கலம், விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பால் ஒன்றியங்களுக்கு கொண்டு வரக்கூடிய முகவர்கள் பால் கொண்டு வராததால், ஆங்காங்கே பால் தேங்கி உள்ளது.

இது தொடர்பாக ,பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இரு முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று பால்நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 70000க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து பால் வராத நிலையில் ,ஆவினில் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும்,மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் பால் வரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.மேலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆவின் நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்த நிலையில், அதனையும் மீறி போராட்டம் தொடர்கிறது.

இது குறித்து, கால்நடை வளர்ப்பு, அனைத்து வகைகளும் உயர்ந்துவிட்ட நிலையில்,பால் முகவர்களின் நிலை மட்டும் உயராமல் இருப்பதால் மிகுந்த வறுமையில் இருக்கிறோம். கால்நடைகளை வளர்ப்பதற்கு போதுமான பொருளாதார வசதி இல்லாமல் இருக்கிறோம். மாட்டுத் தீவனம் உள்ளிட்ட கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் விலை உயர்ந்து விட்ட நிலையில், உங்களுக்காக பால் கொள்முதல் நிலையம் உயர்த்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், தனியாருக்கு பால் அனுப்பும் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று கூறுகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture