காமராசர் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொகுப்பூதிய பணியாளர் பலி

காமராசர் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொகுப்பூதிய பணியாளர் பலி
X

போராட்டத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி ராம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய போராட்டக்காரர்களில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் மரணமடைந்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வந்த 136 பேர் வாய்மொழி உத்தரவின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ள நபர்களை திடீரென வாய்மொழி உத்தரவின் மூலம் நீக்கியது தொடர்பாக கடந்த 80 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடபழஞ்சி சேர்ந்த மாற்றுத்திறனாளி ராம் என்பவர் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது, கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த ராமு என்பவரை திடீரென பணியிலிருந்து நீக்கியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உணவருந்தாமல் இருந்து வந்தார். மாற்றுத்திறனாளி ஆன அவர் மீண்டும் பணியமர்த்த கோரி அரசு மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால்.தற்போது மரணமடைந்துள்ளார். இதேபோல பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். மீண்டும் மற்றொரு மரணம் நிகழ்வதற்கு முன்னால் இவங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!