சோழவந்தானில் சிறப்பு மருத்துவ முகாம்: ஏராளமானோர் பங்கேற்பு
![சோழவந்தானில் சிறப்பு மருத்துவ முகாம்: ஏராளமானோர் பங்கேற்பு சோழவந்தானில் சிறப்பு மருத்துவ முகாம்: ஏராளமானோர் பங்கேற்பு](https://www.nativenews.in/h-upload/2022/03/10/1494425-img-20220310-wa0007.webp)
பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில், முதலமைச்சர் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை அருகே சோழவந்தான், அருகே இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில், முதலமைச்சர் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம், பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பாக முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார் . ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், முகாமை தொடங்கி வைத்தார். மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் கோபி, மேல கால் கிசோ மகேஷ் உள்பட மருத்துவர்கள் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். வட்டார மேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், கருப்பையா, செல்வம், ராமகிருஷ்ணன், பொன் முத்துக்குமார் மற்றும் செவிலியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து உணவு கண்காட்சி வைத்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu