மதுரை அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது

மதுரை அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது
X

பைல் படம்

நாகமலை புதுக்கோட்டையில், குடி போதையில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வசித்து வருபவர் அண்ணாதுரை- (வயது 62). ஜெயமணி தம்பதியினர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, அரவிந்த் (28) என்ற மகனும், அருணா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 21- ஆம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகன் அரவிந்தை அவரது தந்தை கண்டித்ததால், தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதில், மகன் அரவிந்த் கீழே தள்ளி விட்டதில், தந்தை அண்ணாதுரை பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பதறிய குடும்பத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் ‌காயமடைந்த அண்ணாதுரையை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, தாய் ஜெயமணி மகன் அரவிந்த் மீது மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மகனே பெற்ற தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!