உசிலம்பட்டி அருகே ,கருமாத்தூரில் சிலம்பாட்ட போட்டி: பரிசுகள் வழங்கல்!
கருமாத்தூரில் சிலம்பாட்டம் போட்டி ,பரிசு வழங்குதல்.
கருமாத்தூரில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா:
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கருமாத்தூரில் மீசைகாரர் சிலம்பகூடம் நடத்திய சிலம்பாட்ட போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது, பொன்சங்கரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. போட்டியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பச்சை நீலம் மஞ்சல் பட்டையம் வழங்கபட்டது. இதில், உசிலம்பட்டி பகுதியிலிருந்து மாஸ்டர் கெளதம் தலைமையில் சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர் . பொட்டுலுபட்டியை சேர்ந்த தாரணியா சுபாஷ், ஆ. புதுபட்டியை சேர்ந்த ஸ்ரீ பதி ஆகியோர் வெற்றி பெற்று பச்சை பட்டையம், பாராட்டுசான்று பரிசுகளை மீசைகார சிலம்பகூடம் தலைவர் பொன்சங்கர் மூர்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிராமங்களில் சிலம்பாட்ட போட்டி தலை தூக்கி உள்ளது தற்காப்பு கலையான சிவபாடு போட்டி தனி மனிதனுக்கு மிகவும் பாதுகாப்பானது இப்ப போட்டியானது இடப்பட்ட காலங்களில் நடத்தப்படாமல் இருந்தது மீண்டும் சிலம்பாட்ட போட்டியானது பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு பயிற்சியில் அளிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது இதுபோன்ற பழங்கால கலைகளை கிராமங்கள் தோறும் வழக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆர்வம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu