கிராமிய, தெம்மாங்கு இசைக் கலைஞர்கள் வீடு ஒதுக்கீடு காேரி கலெக்டரிடம் மனு

மதுரை மாவட்ட கிராமப்புற, தெம்மாங்கு கிராமிய இசைக் கலைஞர்கள் ஊர்வலமாக பொய்கால் குதிரையுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் வீடு கேட்டு மனு அளித்தனர்.
மதுரை மாவட்ட கிராமப்புற, தெம்மாங்கு கிராமிய இசைக் கலைஞர்கள் ஊர்வலமாக பொய்கால் குதிரையுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் வீடு கேட்டு மனு அளித்தனர்:
அவர்கள் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாவட்டத்தில், பல ஆண்டுகளாக, கிராமிய கலைகளான, மாடு ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆகிய கிராமிய கலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம்.
கொரோனா காலம் என்பதால், கோயில் விழாக்கள் நடைபெறாத சூழ்நிலையில், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், தெருக்களில் ஒரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வறுமையில் வாடி வருகிறோம்.
ஆகவே, கிராமிய, தெம்மாங்கு இசை கலைஞர்களுக்கு குடியிருக்க அரசானது, வீட்டு வசதியை ஏற்படுத்தி தர, கிராமிய இசைக் கலைஞர்கள் கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu