நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடத்தை விதிகள்: போலீஸார் கெடுபிடியால் வியாபாரிகள் அவதி
சோழவந்தானில் வியாபாரிகளிடம் போலீஸாரின் கெடுபிடி காரணமாக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் பேரூராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சி பெறல் 18 வார்டுகளிலும் நடைபெறுகிறது. இதில், அதிமுக திமுக, பாஜக கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சார்பாக 80 பேர் போட்டியிடுகின்றனர். காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோழவந்தான் நகரில், ஹோட்டல் டீக்கடை, ஸ்வீட், பேக்கரி, ஸ்டேஷனரி, ஜவுளி பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. போலீசார், இரவு 10 மணிக்கு கடைகளை அடைக்க சொல்லி கெடுபிடி செய்கின்றனர். இதனால், வியாபாரிகள் மன வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து, வியாபாரிகள் கூறும்போது: ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து வியாபாரிகள் இன்னும் மீளவில்லை.
இந்நிலையில், போலீசார் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் வாங்கிய கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலையில், வியாபாரிகள் இருந்து கொண்டிருக்க சூழ்நிலையில் போலீசார் இரவு பத்து மணிக்கு கடைகளைஅடைக்க சொல்லி கெடுபிடி செய்கின்றனர். தமிழக அரசு இரவு முழுவதும் கடை திறப்பதற்கு தளர்வு செய்துள்ளதாக எங்களுக்கு தெரிகிறது . ஆனால், போலீசாருக்கு தெரியவில்லையா? பல்வேறு இன்னலுக்கு ஆளாகி, தற்போது வியாபாரிகள் மீண்டு வரும் தருவாயில் உள்ளோம். தற்போது, பேரூராட்சி தேர்தல் நடப்பதால், வியாபாரம் கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. இந்த நேரத்தில் போலீசார் கெடுபிடியால், நாங்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம்.
ஆகையால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோழவந்தான் வியாபாரிகள் மீது கருணை கொண்டு கடைகள் எப்பொழுதும்போல் அடைப்பதற்கு சோழவந்தான் போலீசாருக்கு உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu