விக்கிரமங்கலம் அருகே கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விக்கிரமங்கலம் அருகே, ஊர் பொது பாதை ஆக்கிரமிப்பு?
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பெருமாபட்டி கிராமத்தில், பொதுப் பாதையை ஆக்கிரமித்து சிலர் குடியிருப்புகள் கட்டி வருவதாகவும் , இதனால் விவசாயப் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவதாகவும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் மனு அளித்து விவரங்கள் கேட்டுள்ளனர் .
அதில், விக்கிரமங்கலம் ஊராட்சி கீழப்பெரும்பட்டி கிராமத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுப்பாதை நீளம், அகலம் விவரங்கள் வழங்குமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது குறித்து, முறைப்படி கிராம நிர்வாக அலுவலர் இடமும் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் பொதுபாதையை ஆக்கிரமித்த இடத்தை நேரில் பார்வையிட்டு அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu