வாகனங்களில் பாதுகாப்பின்றி தென்னை மட்டைகள் எடுத்துச்செல்வதால் விபத்து அபாயம்

வாகனங்களில் பாதுகாப்பின்றி தென்னை மட்டைகள் எடுத்துச்செல்வதால் விபத்து அபாயம்
X
 வாகனங்களில் பாதுகாப்பின்றி ஏற்றிச்செல்லப்படும் தென்னை மட்டைகள்
சோழவந்தான் பகுதியில் ஆபத்தான முறையில் கனரக வாகனங்களில் தென்னை மட்டைகளை கொண்டு செல்வதை போலீஸார் தடுக்க வேண்டும்

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக வாகனங்களில் ஏற்றி, வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

அவ்வாறு, கொண்டு செல்லும் தென்னை மட்டைகளை உரிய முறையில் பாதுகாப்பாக கொண்டு செல்வதில்லை. கனரக வாகனங்களில் ஏற்றியபிறகு அதை தார்ப்பாய் கொண்டு மூடாமல் மட்டைகளை அப்படியே எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லும்போது காற்றில் மட்டைகள் பறந்து சாலைகளில் விழுகின்றன. அவ்வாறு பறந்து விழும் மட்டைகள் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீதும் விழுகின்றன. அதன் தூசுகளும் வானங்களில் பயணிப்பவர்களது கண்களில் விழுகிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், வேகத்தடை மற்றும் குறுகலான சாலைப் பகுதிகளில் செல்லும் போது தென்னை மட்டைகள் சரிந்து கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய சூழல் இருக்கிறது. இதனால், தென்னை மட்டைகளை.ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர்களிடம் தேங்காய் குடோன் உரிமையாளர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business