உசிலம்பட்டியில் ரேசன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டியில் ரேசன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
X

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உசிலம்பட்டியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உசிலம்பட்டியில் ரேசன் பொருட்களை கிட்டங்கியிலிருந்து, எடுத்து செல்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த கோரியும் ரேசன் கடை விற்பனையாளர்கள் வேலை நிறுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ரேசன் பொருட்களை கிட்டங்கிகளிலிருந்து, எடுத்து செல்லும் போது எடை குறைவான பொருட்களை வழங்குவது, விற்பனையாளர்களை எடுத்து, செல்லும் பணியில் ஈடுபடுத்தி ஊழலுக்கு பொறுப்பாக்குவது, பொருட்களை ஏற்ற இறக்க வரும் லோடுமேன்களுக்கு பணம் கொடுக்க வைப்பது மற்றும் ரேசன் கடைகளில் பெண் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பி.ஓ.எஸ் இயந்திரம் பழுதானால், விற்பனையாளரே அதற்கு பொறுப்பேற்க வைப்பதை கண்டித்தும் என, பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தின், ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதியில் உள்ள 18 கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், கிட்டங்கியில் இருந்து பொருட்களை எடுத்து வருவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர கோரியும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரவில்லை எனில் வரும் 8ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!