உசிலம்பட்டி அருகே, ராக்காயி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டி அருகே, ராக்காயி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!
X

ராக்காயி அம்மன் ஆலய, கும்பாபிஷேகம்.

உசிலம்பட்டி அருகே ராக்காயி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் அருகே, பழமை வாய்ந்த ராக்காச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா: ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வில்லாணி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த ராக்காச்சி அம்மன், வீரபத்திரசுவாமி, மாயாண்டிச்சாமி, சின்னச்சாமி கோவில் உள்ளது. இக்கோவில், புனரமைக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, முன்னதாக, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்துசாந்தி, மூல மந்திர ஜெயம் மற்றும் இரண்டாம் காலயாக சாலை பூஜைகள், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது.


பின்னர், மங்கள இசை முழங்க சிவாச்சாரியார் தெய்வச்சிலை தலைமையிலான அர்ச்சகர்கள் ராக்காச்சியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள வீரபத்திர சுவாமி, மாயாண்டிச் சாமி, சின்னச்சாமி கோவில் பீடத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, ராக்காச்சியம்மனுக்கு, பாலாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி குழுவினர் செய்தனர். மேலும், கோவில் கமிட்டி குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!