மதுரை அருகே கிராம கோயிலில் நடைபெற்ற பூஜாரி தேர்வு நிகழ்ச்சி

மதுரை அருகே கிராம கோயிலில் நடைபெற்ற பூஜாரி தேர்வு நிகழ்ச்சி
X

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகே கிராம கோயில் பூஜகர் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அருகே செல்லம்பட்டி கிராம கோயிலில் பூஜாரி தேர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, அய்யனார் குளம் கடசாரி நல்ல குரும்பன் கோவில் பூசாரி தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் ,அய்யனார் குளத்தில் கடசாரி நல்ல குரும்பம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்காளிகளாக உள்ள நிலையில், இந்த கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும், ஒவ்வொரு மாதமும் விழா காலங்களிலும் மற்றும் சுப முகூர்த்த நாட்களிலும் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து,இந்தக் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூசாரி தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்தனர். அவர்கள் கோவிலின் அருகில் உள்ள அவரவர் இல்லங்களிலும் பொது மந்தையிலும் கூடி பூசாரி பிடித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினார்கள். இதில், அய்யனார்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!