உசிலம்பட்டி அருகே, பள்ளிகள் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டம்

உசிலம்பட்டி அருகே, பள்ளிகள் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டம்
X

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பள்ளி மாணவ மாணவிகளுடன் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி அருகே, பள்ளிகள் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி அருகே பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, ஆணையூர் கண்மாய் வழியாக பூதிப்புரம் கிராமத்திற்கு செல்லும் பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அவ்வழியாக பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை நீடித்து வருவதாகவும், இது தொடர்பாக உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை கோரிக்கை விடுத்தும்,எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில், இன்று ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தர கோரி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆணையூர், மற்றும் கட்டக்கருப்பன்பட்டி கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து, விரைந்து வந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமயிலான அதிகாரிகள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil