போட்டியில் வென்ற விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளி மாணவிகளுக்கு பரிசு
போட்டியில் வெற்றி பெற்ற விக்கிரங்கங்கலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி . ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள் வழங்கினார்:
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி சார்பில், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிநி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரன் பரிசுகள், பதக்கங்கள்,ஷீல்டுகள் வழங்கினார். இதில், செல்லம்பட்டி ஒன்றிய திமுக நிர்வாகிகள் பள்ளி ஆசிரிய பெருமக்கள் மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, 34 வகையான போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி கல்லூரிகளில் வினாடி-வினா, கவியரங்கம், கட்டுரை, தொடர் ஓட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்களை ஒப்பித்தல், தொழிற் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகள், சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள், ஆங்கில கருத்தரங்குகள், கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாவட்ட அளவில் கருத்தரங்குகள், கருணாநிதியின் இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்குகள், மாவட்டத் தலைநகரங்களில் புகைப்பட கண்காட்சி உட்பட 34 வகையான தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தி.மு.க. தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu