சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்

சோழவந்தான் பிரளயநாதர்(சிவன்) கோயில் பிரதோஷ விழாவில், பிரளயநாதர் சுவாமி, பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சோழவந்தான் பிரளயநாதர்(சிவன்) கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில், பிரளயநாதர் சுவாமி, பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர். அர்ச்சகர்கள் ரவி, பரசுராம், ஐயப்பன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை, தக்கார் இளமதி, எம்.வி.எம் குழுமத் தலைவர் மணி முத்தையா, தொழிலதிபர் வள்ளி மயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் பிரதோஷக் குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல், திருவேடகம் ஏடகநாதர் கோயில், சட்டநாதர் சித்தர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரமுடையார் கோயில், மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மேலக்கால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu