உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியின் இயற்கை வளப் பாதுகாப்பு குழுவின் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற்றது.

உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் இயற்கை வளப் பாதுகாப்பு குழுவின் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடந்தது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியின் இயற்கை வளப் பாதுகாப்பு குழுவின் சார்பாக ஆண்டிபட்டி வேலப்பர் கோவில் வளாகத்தில் இரண்டு நாள் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு, கல்லூரிச் செயலர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். பொருளாளர் வன ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை வள பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ரவி முகாமை துவக்கி வைத்து பேசினார்.

கல்லூரியின் இயற்கை பாதுகாப்பு குழு மாணவர்கள் பயிற்றுனர் ரமேஷ் தலைமையில் கோவில் மற்றும் சுற்றியுள்ள மலை வனப்பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். மேலும் மக்கள் மத்தியில் தூய்மை மேலாண்மை மற்றும் வன வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊரக வளர்ச்சி துறை தலைவர் தவமணி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை வனத்துறை உதவியுடன் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story