/* */

விக்கிரமங்கலம் அருகே பேச்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

சோழவந்தான் அருகே நரியம்பட்டி கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விக்கிரமங்கலம் அருகே பேச்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
X

பேச்சியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, நரியம்பட்டி கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, இரண்டு நாள் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து, பெரியசம்பாதி பிள்ளை பழி கொடுத்த நல்லபிள்ளை தேவரின் ஏழு வீட்டு வகையறாக்கள் முன்னிலையில், சோழவந்தான் பிரசாத் சர்மா தலைமையில், புனிதநீர் குடங்கள் எடுத்து வரப்பட்டு, மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.

பின்னர், கோவில் கோபுர விமானத்தில், புனித கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . பேச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதையடுத்து மகா அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. எட்டூர கிராம கமிட்டி தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் விக்டோரியா பூர்வலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விக்கிரமங்கலம் ஊராட்சி சுகாதாரப் பணிகள், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், ஏழு வீட்டு வகையறாக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 11 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி