மதுரையிலிருந்து தேனிக்கு பயணிகள் விரைவு ரயில்: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரையிலிருந்து தேனிக்கு புறப்பட்ட பயணிகள் விரைவு ரயில்
மதுரை -தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் பயணம் மதுரை சந்திப்பில் பயணிகளின் மகிழ்ச்சியுடன் இன்று காலை துவங்கியது:
மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ள நிலையில் இந்த புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பாரத பிரதமர் நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததை தொடர்ந்து இன்று காலை மதுரை சந்திப்பில், மதுரை -தேனி ரயில் பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தனது முதல் பயணத்தை இனிதே துவக்கியது.
போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ரூபாய் 445.46 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக மதுரை - தேனி இடையேயான புதிய அகல ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட புதிய ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.
மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 75 கிமீ தூரமுள்ள இந்த புதிய அகல ரயில் பாதையில் மூன்று சாலை மேம்பாலங்கள் , ஐந்து பெரிய பாலங்கள் , 161 சிறிய பாலங்கள், 32 சுரங்கப்பாதைகள் , 17 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன .
மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ரூபாய் 445.46 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக மதுரை - தேனி இடையேயான புதிய அகல ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று தனது முதல் பயணத்தை துவக்கிய மதுரை தேனி ரயிலில் பயணிகள் தங்களது மலரும் நினைவுகளுடன் பயணித்தனர்.
மேலும், மதுரை தேனி ரயில் சேவையின் முதல் பயணத்தில் பங்கேற்ற பயணிகள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது , 12 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஒரு முறை மட்டுமே மதுரை தேனி சென்று வரும் நிலையில் கூடுதல் சேவைகளை இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் .
மேலும் ,பேருந்தில் மதுரை தேனி ,போடி என செல்லும் போது ஏற்படும் சிரமங்கள் தற்போது களையப்பட்டு உள்ளது என்றும் கட்டணமும் பேருந்து கட்டணத்தை விட ரயில் பயண கட்டணம் குறைவு என்பதால் குடும்பத்துடன் சென்று வர ஏதுவாக உள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், மதுரை முதல் தேனி வரை உள்ள வழியோர ஊர்பகுதி மக்கள் , மாணவர்கள் , அரசு . தனியார் வேலைக்கு செல்வோருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால் ஏற்கனேவே நடைமுறையில் இருந்த ரயில் நிலையங்களில் நின்று சென்றால் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu