யுகாதியை முன்னிட்டு சோழவந்தானில் பஞ்சாங்க படனம்

யுகாதியை முன்னிட்டு சோழவந்தானில் பஞ்சாங்க படனம்
X

மதுரை மாவட்டம் சோழவந்தானில் யுகாதி தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற பஞ்சாங்க படனம்

யுகாதியை முன்னிட்டு அனைத்து மக்களும் நட்புடன் இருக்க வேண்டியும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம் நடைபெற்றது.

தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் பண்டிட் தலைமையில் பஞ்சாங்க படனம் நடைபெற்றது.

இதில், யுகாதி வருட பிறப்பை முன்னிட்டு அனைத்து குடும்பங்களும் இறைவன் அருளாலும் குலதெய்வத்தின் ஆசியாலும் தாங்கள் விரும்பிய நல்லது யாவும் கிடைக்கப்பெற்று நோய்கள் யாவும் நீங்க பெற்று தேக ஆரோக்கியமும் மன நிம்மதியும் சந்தோஷம் பொங்க வேண்டும். தங்கள் இல்லங்களில் சீக்கிரமாக மங்கள காரியங்கள் அனைத்தும் நடக்க வேண்டியும், நிம்மதியாக இருக்க வேண்டியும், எல்லா ஜனங்களும் நட்புடன் இருக்க வேண்டியும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு யுகாதி தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

யுகாதி வரலாறு, முக்கியத்துவம்: யுகாதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான யுகா (வயது) மற்றும் ஆதி (ஆரம்பம்) என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது பொருளாகும். இது இந்து சந்திர நாட்காட்டி மாதமான சைத்ராவின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. இந்த நாளில்தான் பிரம்மா பூமியின் பகுதிகளை உருவாக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது.யுகாதி அன்று மொரீஷியஸ் நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கு கணிசமான அளவு இந்துக்கள் வாழ்வதால் யுகாதிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

தெலுங்கு நாள்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ’யுகாதி’ எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மார்ச் 22-ம் தேதி (புதன்கிழமை) தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது. ஒடிசாவில் இது ‘பனா சங்க்ராந்தியாக’ அழைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில், ‘பொய்லா பாய்சாக்’ புதிய ஆண்டில் தொடங்குகிறது மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹூ’ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால், இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன.

Tags

Next Story