/* */

உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தமிழ்நாடு முழுவதும், காலியாகஉள்ள 50ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி , உசிலம்பட்டியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது எனவும், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு சத்துணவு ஊழியர்களும் ஒன்று முதல் மூன்று சத்துணவு மையங்களில் கூடுதல் பணி செய்யும் நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையை, மாற்றவும், சத்துணவு ஊழியர்களுக்கு உள்ள பணிச்சுமையை குறைக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி, தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த காலிப்பணியிடங்களை போர்க் கால அடிப்படையில் நிரப்ப கோரி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நடத்தினர்.


இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான் தலைமையிலான சத்துணவு ஊழியர்கள் 50 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும், 6750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தில் ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்,

ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், மாவட்ட தலைநகரங்களில் அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 15 Jun 2024 7:29 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை பீச்- திருவண்ணாமலை இடையே இயங்கும் ரயிலின் பயண நேரம் குறைக்க...
  2. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  3. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  5. கோவை மாநகர்
    பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
  6. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  7. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  8. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  9. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  10. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!