மதுரை மாவட்டத்தில் நவ. 29 ல் பயிர்கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்

மதுரை மாவட்டத்தில் நவ. 29 ல் பயிர்கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்: தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கி:

மதுரை மாவட்டத்தில், நவ. 29-ல் பயிர் கடன் வழங்கும் முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல்.

மதுரை மாவட்டத்தில், நவ. 29-ல் பயிர் கடன் வழங்கும் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்.

மதுரை மாவட்டத்தில், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நடப்பாண்டில் ரூ.110.00 கோடி மதிப்பீட்டில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.150.00 கோடி மதிப்பீட்டில் பயிர்கடன் வழங்கப்பட உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. 29.11.2021-ஆம் தேதி முதல் அனைத்து வட்டாரங்களிலும் பயிர்கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு பயிர்கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!