விடுதி மாணவர்களின் நலனிற்காக காப்பாளர் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு

விடுதி மாணவர்களின் நலனிற்காக காப்பாளர் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு
X

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

விடுதி மாணவர்களின் நலனிற்காக காப்பாளர் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

சிறைக்கைதிகளுக்கு வழங்கும் தரமான உணவுகள் கூட விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. விடுதிகளுக்கு வழங்கும் அரிசிகளில் பூச்சி, புழுக்களாக உள்ளது. ஆனால், பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல, உயரதிகாரிகள் நடவடிக்கை உள்ளது. எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், விரைவில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்க நிறுவனத்தலைவர் சகாதேவன் அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மதுரை ,தேனி ,திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை ,திருச்சி , கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் மாநிலத்தலைவர் சகாதேவன் கூறியதாவது:-

விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட துணை ஆட்சியர்கள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அனைத்து கல்லூரி மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி விடுதிகளுக்கு தற்போதுள்ள பட்டதாரி காப்பாளர்கள் என்ற பணியிடத்தை முதுகலை பட்டதாரிகள் பணியிடமாக தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் , மாணவர்களுக்கு வெளி நபர்கள் மூலமாக உணவுகளை தயாரிக்கும் GENTRALIZED திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் அரசாணை எண் 93/1 - 2012ல் உள்ளது போல ஆசிரியர்கள் போலவே பணியில் இருக்கக்கூடிய காப்பாளர்களுக்கும், கோடை விடுமுறை முடிகிற வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.இது 2012 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு முதல் மறுக்கப்பட்டுள்ளது அதனை நிறைவேற்றி தர வேண்டும்.

விடுதிகளில் பணிபுரியும் போது இறந்த ஊழியர்களுடைய குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் மூன்றாண்டு காலமாக பதவி வழங்கப்படாமல் தேங்கிய நிலையில் கிடக்கிறது. எனவே 53 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என, கேட்டுக்கொள்கிறோம் .

விடுதிகளுக்கு தேவையான மின் கட்டணத்தை விடுதி காப்பாளர்கள் கட்டாமல்,துறை சார்ந்த அலுவலர்களே கட்ட வேண்டும். மாணவர்களுடைய தங்க வைப்பதற்கு நல்ல தரமான விடுதிகளும், மாணவர்களுக்கான அரிசியும் வழங்கப்பட வேண்டும் .

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய அரிசிகளை தவிர்த்து, தரமான அரிசி மளிகை காய்கறிகள் வழங்க சிறப்பான உணவு கொடுத்து கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்.

விடுதிகளுக்கு தேவையான அரிசி, கோதுமை, எண்ணெய் அனைத்தும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகம் மூலமாக வழங்கப்பட வேண்டும். விடுதிகளுக்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற கூட்டுறவு துறைகள் மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக சப்ளை செய்ய வேண்டும் .

தமிழகத்தில் இருக்கக்கூடிய மொத்த விடுதிகளில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட காப்பாளர் பணியிடங்கள் மூன்றாண்டுகளாக, காலியாகவே உள்ளது. இதனை நிரப்ப வேண்டும், விடுதிசமையல் பணி செய்யக்கூடிய சமையலர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டு உள்ளது. அதனையும் பூர்த்தி செய்ய வேண்டும் .

விடுதிகளில் பணிபுரியக்கூடிய பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நிரந்தர பணியாளராக ஆணை வழங்க வேண்டும் .

தமிழகத்தில் உள்ள சிறைவாசிகளுக்கு வழங்கக்கூடிய உணவுக்கான ஒருநாள் கட்டணம் விடுதி மாணவர்களுக்கு கொடுக்கக் கூடிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகம் .கைதிகளுக்கு. உணவு கட்டணம் அதிகம். மாணவர்களுக்கு உணவு கட்டணம் மிக மிகக் குறைவு .இதனை உயர்த்தி தரப்பட வேண்டும் .

மருத்துவமனை சிறைச்சாலை போன்றவைகளில், நபருக்கு அரிசி பொருட்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது அந்த அடிப்படையில், விடுதி மாணவர்களுக்கு உணவுகளை தொகையாக நிர்ணயம் செய்யாமல், ரேஷன் அளவு பொருட்கள் அடிப்படையில் வழங்க வேண்டும்.

இது போன்ற அனைத்து கோரிக்கைகளையும் அரசாங்கம் செய்யா விட்டால், இந்தத்துறையே அழிவை நோக்கி செல்லும்,இந்த துறையை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும். இங்கிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாக உருவாகி இருக்கிறார்கள். கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கல்லூரி கல்வி என்ற கானல் நீரை நிஜமாக காட்டியது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகள் தான்.

கோரிக்கைகளை வெகு விரைவாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில்,காலம் கடத்தும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளையும் ஒன்று திரட்டி தலைமைச் செயலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும்.

அரசு பள்ளிகளில், கல்வி பயிலக்கூடிய 7.5 இட ஒதுக்கீட்டில் விடுதி மாணவர்களுக்கு 2 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்விக்கு போவதற்கு உதவியாக இருக்கும் விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுவதில்லை. விடுதி மாணவர்கள் வீடுகளில் இருந்து வரும் மாணவர்கள் சைக்கிள் ஓட்டி செல்வதை பார்த்து ஏக்கம் அடைகிறார்கள். இதனால், மாணவர்கள் சைக்கிள் போன்றவற்றிற்காக விடுதிக்கு வருவதை குறைத்து விடுகின்றனர். மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை அரசாங்கம் உருவாக்கிறது. மாணவர்களே ஒரே தட்டில் பார்த்து அனைவருக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும் .

சில இடங்களில் பள்ளிக்கும் விடுதிக்கும் இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதன் காரணமாக,அந்த பகுதிக்காகவது சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதி மாணவர்களுக்கு, சைக்கிள் வழங்க வேண்டும் .

தற்போது அனைத்து விடுதிகளுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி விநியோகப்படுகிறது.

அது பல்வேறு நேரங்களில் மிக மோசமாக துர்நாற்றம் கல் உள்ளதாக பூச்சி புழுக்கள் இருப்பதாக இருக்கிறது.இது மாணவர்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்திற்கு உகந்ததா இல்லை. அதனால், பல்வேறு மாணவர்கள் இந்த அரிசிகளை பார்த்து வராமல் போகிறார்கள்

எதிர்காலத்தில் மாணவர்களுக்கு நல்ல தரமான அரிசிகளை வழங்கி மாணவர்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் அவர்களுடைய நலனையும் பாதுகாக்க வேண்டும்.

காப்பாளர்கள் அரிசியை தூய்மையாக பராமரித்து பாதுகாத்து மாணவர்களுக்கு சமைத்து வழங்கி வருகிறோம். ஆய்வுகளின் போது உயர் அதிகாரிகள் காப்பாளர்கள் மீதான நடவடிக்கை பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல அரிசி கொடுக்கக்கூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், காப்பாளர் போன்ற எளிய பதவியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது