மதுரையில் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. செயற்க்குழுக் கூட்டம்

மதுரையில் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. செயற்க்குழுக் கூட்டம்
X

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ,வடக்கு மாவட்டத் தலைவர் பிலால் தீன், தலைமையில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் பகுர்தீன், வரவேற்புரை நிகழ்த்தினார்.

பொதுச் செயலாளர் ஜியாவுதீன் பழைய புதிய தீர்மானங்களை வாசித்தார்.சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நஜ்மா பேகம் செயற்குழுவில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினார்.

இறுதியாக ,துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் நன்றி கூறினார். கூட்டத்தில், கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: வருகின்ற மாநகராட்சி தேர்தலில், முதற் கட்டமாக மதுரை 39-வது வார்டு கோரிப்பாளையம்,31வது வார்டு யாகப்பநகர், போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ,செல்லூர், புதூர், பொறியாளர் நகர், மேலூர், முகமதியாபுரம், 20&22 ஆகிய பகுதிகளில் போட்டியிட மாநில தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக இம்தியாஸ் அகமது தேர்வு செய்யப்பட்டார்.தொண்டர் அணி தலைவராக, வாகைகுளம் ஒலியுல்லாஹ் தேர்வு செய்யப்பட்டார். மருத்துவ அணி தலைவராக செல்லூர் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.

சமூக ஊடக அணி தலைவராக மேலூர் ரபீக், செயலாளராக புரோஸ் கான், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.வேளாண் விவசாயிகள் அணி தலைவராக மேலூர் சையது, செயலாளராக சக்கரை அத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சியின் வளர்ச்சி நிதி சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது..

Tags

Next Story