அதிமுக வாக்கை யாராலும் பிரிக்க முடியாது: தேனி வேட்பாளர்

அதிமுக வாக்கை யாராலும் பிரிக்க முடியாது: தேனி  வேட்பாளர்
X

தேனி அதிமுக  வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார்.

இரட்டை இலையில் ஓட்டுப் போடுகிற மக்களிடம் 5 ஆயிரம் கொடுத்தாலும் மாற மாட்டார்கள். அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது - என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மற்றும் அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவதற்கு நாராயணசாமி அவர்களின் வெற்றி அச்சாணியாக அமைய வேண்டும்., எதிர்த்து நிற்பவர்கள் இரட்டை இலையில் வாழ்வு பெற்றவர்கள், இரட்டை இலையால் உயர்வு பெற்றவர்கள். இன்று இரட்டை இலையை வீழ்த்துவேன் என்று தீயசக்தியாக உதயசூரியன் சின்னத்திலே நிற்பவர்களை நாம் வீழ்த்திக் காட்ட வேண்டும் மண்ணை கவ்வ செய்ய வேண்டும்.,

அதே போல 14 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இன்று தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தேனி மாவட்ட மக்களை பழி கொடுப்பதற்கு வந்துள்ள அவருக்கும் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் என, பேசினார்.

தொடர்ந்து பேசிய தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, டிடிவி தினகரன் அவர் சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்க தான் வந்துள்ளார்.நம்மை பாதுகாக்க அல்ல. திமுக வேட்பாளர் இப்போது வரை எத்தனை கட்சி மாறி உள்ளார்., 3 முறை அவரை அழகு பார்த்து எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். அவர் டிடிவியுடன் சேர்ந்து இரட்டை இலையை முடக்க பார்த்தார்.

இத்தனை பிரச்சனைகளையும் எதிர்நீச்சல் போட்டு இரட்டை இலையை காத்தார். இரட்டை இலையில் ஓட்டுப் போடுகிற மக்களிடம் 5 ஆயிரம் கொடுத்தாலும் மாற மாட்டார்கள். நம்ம ஓட்டை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது.

அம்மா சொன்னதை போல, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவையோ, இரட்டை இலையையோ எந்த கொம்பனாலும் முடக்க முடியாது. அவர் சொன்ன வாக்கு இன்றும் தொடரும், நாளையும் தொடரும், என்றும் தொடரும்., என பேசினார்.

Tags

Next Story
ai in future agriculture