மதுரை அருகே ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்

மதுரை அருகே ரூ. 10 லட்சம்  மதிப்புள்ள  கள்ளநோட்டுகள் பறிமுதல்
X
போலீஸார் திடீரென அந்தத்தோட்டத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டதில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருபது தெரிய வந்தது

மதுரை அருகே பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரை அருகே தோட்டத்தில் பல லட்சம் பெறுமான கள்ள நோட்டுகளை, தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் திடீரென அந்தத்தோட்டத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டதில், கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருபது தெரிய வந்தது. இது தொடர்பாக, பேரையூர் சலுப்பப்பட்டியில் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்த தோட்ட உரிமையாளர் பாண்டியை போலீஸார் கைது செய்தனர்.

Tags

Next Story