மதுரை அருகே திருட்டு வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது..!

போலீஸரால் கைது செய்யப்பட்ட பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி.
உசிலம்பட்டி :
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவர் கடந்த 20ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சாப்டூர் வாழைத்தோப்பு பகுதி வழியாக சதுரகிரி மலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வாழைத்தோப்பு பகுதிக்குச் சென்றார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சதுரகிரி மலைக்கு சென்று தரிசனம் முடித்து திரும்பினார். திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக உதயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் உசிலம்பட்டி பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் என்பவர் உதயகுமாரின் இருசக்கர வாகனத்தை திருடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
தமிழ்செல்வன், தேடப்பட்டு வந்த இருசக்கர வாகனத்தை திருடி, அந்த இருசக்கர வாகனத்தை வேறு வாகனம்போல அதன் நிறத்தை மாற்றி பெயிண்ட் அடித்து இருந்தார். மேலும் அந்த இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளத்தை மறைத்து, வேறு ஒரு இருசக்கர வாகனம்போல ஓட்டி வந்ததார். இதைக் கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சாமி கும்பிடச் சென்றவரின் இருசக்கர வாகனத்தை, தேசிய கட்சியான பாஜகவை சேர்ந்த பிரமுகர் திருடி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் செய்யும் தவறுகளால் கட்சியின் பெயருக்கு இழுக்கு ஏற்படுகிறது. உண்மையிலேயே ஒரு கட்சிக்கு கீழ்மட்ட நிர்வாகிகளே நற்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ளவேண்டும்.தொண்டர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள்தான் கட்சிக்கு நாடுமுழுவதுமான பெயரை உருவாக்குவதில் அடிப்படையாக இருக்கவேண்டும். உள்ளூரில் நற்பெயர் இருந்தால் மட்டுமே அது நமது முழுவதும் விரிவடையும். தவறு செய்பவர்களை கட்சி நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்தே நீக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu