மூக்கையா தேவர் நூற்றாண்டு விழா: முளைப்பாரி எடுத்து கொண்டாட்டம்
மதுரை அருகே மூக்கையும் தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்த கிராம மக்கள்
சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி .கே. முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சீர் மரபினர் நலச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தவமணி தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து பாப்பாபட்டி கிராமத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு விரதம் இருந்து, மேலக்கால் கிராமத்தில் மெயின் வீதிகள் வழியாக முளைப்பாரி உடன் ஊர்வலமாக சென்றனர்.பின்பு அங்கிருந்து வாகனத்தில் அனைவரும் பாப்பபட்டிக்கு சென்று அங்குள்ள குளத்தில் முளைப்பாரியை கரைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்:
பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவர் பிறந்த ஊரான பாப்பாப்பட்டியில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என சொல்லில் மட்டுமின்றி செயலிலும் செய்து காட்டிய பெருமைக்குரிய பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசு பி.கே. மூக்கையா தேவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் உசிலம்பட்டி தொகுதியிலிருந்தும் தொடர்ச்சியாக ஆறு முறை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திறம் பட மக்கள் பணியாற்றியவர்.
தற்காலிக பேரவைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புற பணியாற்றியவருமான மறைந்த பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு துவக்க விழா 04-04-2022 நேற்று தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு இந்தக்கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுமென ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu