உசிலம்பட்டி அருகே சாலையில் கிடந்த மரத்தை அகற்றிய எம்.எல்.ஏ..!

உசிலம்பட்டி அருகே சாலையில் கிடந்த மரத்தை அகற்றிய எம்.எல்.ஏ..!
X

சாலையில் கிடந்த மரத்தை அகற்றிய, உசிலம்பட்டி எம்எல்ஏ.

மழையுடன் வீசிய காற்றுக்கு சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்துக்கு உதவிய எம்.எல்.ஏ.

சாலையில் கிடந்த மரத்தை அகற்றிய எம்.எல்.ஏ.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே, மழையால் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் சாலையிலிருந்து அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கணூர், செக்கானூரனி, எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலான கனமழை பெய்து வருகிறது.

இன்றும் எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக உத்தப்புரம் - எழுமலை சாலையில் வாவரகாய்ச்சி மரம் முறிந்து விழுந்து கிடந்தது.

எழுமலை சென்றுவிட்டு, உசிலம்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், காரிலிருந்து இறங்கி சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தனது ஆதரவாளர்களுடன் அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வை எம்எல்ஏ அய்யப்பன், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது., மேலும், சாலையிலிருந்து மரத்தை அகற்றிய எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கு, பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil