உசிலம்பட்டி அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா..!

உசிலம்பட்டி அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா..!
X

உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் ரிஸ்க் எடுக்க கூடாது.மிக மிக அவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் ரிஸ்க் எடுக்க கூடாது, மிக மிக அவசியத் தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும்., - நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி:

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கருமாத்தூர், செல்லம்பட்டி பகுதியில், அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ,

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவமழை காலம், இந்த காலத்தில் பெருமழை, பெருவெள்ளம், சூறைகாற்று, புயல் காற்று வீசும். கடந்த ஆண்டு எதிர்கட்சி தலைவர் எடுத்து சொல்லியும் கூட நாங்கள் எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வீர வசனம் பேசினார்கள்.

ஆனால், சென்னைமூழ்கிப் போனதை பார்த்தோம். தூத்துக்குடி, திருநெல்வேலியில் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் எல்லோரும், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தி இருக்கும் காட்சியை ஊடகம் மூலம் பார்க்க முடிகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது இந்த அரசின் மீது நம்பிக்கை போய் விட்டது. பேச்சளவிலேயே தான் இருப்பார்களே தவிர செயல் அளவில் இல்லை. தொடர்ந்து, ஆய்வு கூட்டங்கள் நடக்கிறது. அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர். இந்த இருவரைத் தவிர வருவாய் பேரிடர் மேலாண்மை அமைச்சரை களத்தில் காணவில்லை, மாநகராட்சியை கையில் வைத்திருக்கும் அமைச்சரை காணவில்லை, உள்ளாட்சித்துறை அமைச்சரைக் காணவில்லை.

எனக்குகிடைத்த புள்ளி விவரங்கள் படி 60% நீர் நிலைகள், கண்மாய்கள், நீர்வழி தடங்கள் தூர்வாரப் படவில்லை, பல இடங்களில் மழை நீர் வடிந்ததாக தெரியவில்லை, மக்களைக் காப்பாற்ற தாயாக இருக்கிறோம் என்கிறார்கள., எதற்கு தயார் என்றால், மழை வந்தால் ஓடுவதற்கு தான் தயாராக இருக்கிறார்கள்.

நாங்கள் இருக்கும்போது அறிவியல் ரீதியாக செயல்படுத்தினோம். மழை வருவதற்கு முன், மழை பெய்து கொண்டிருக்கும் போது, மழை நின்ற பின் என பணிகளை செய்ய வேண்டும் என செய்தோம், ஆனால் ,என்ன செய்யப் போகிறார்கள் என, தெரியவில்லை, எந்த விவரங்களும் இல்லை.

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் ரிஸ்க் எடுக்க கூடாது.மிக மிக அவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும். 65 கிலோ மீட்டர் என கணித்து சொல்வார்கள் ஆனால், 150 க்கு மேல் சூறாவளி காற்று வீசும் அது போன்ற நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம். மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், வயதானவர்களுக்கு, மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் மக்களிடத்தில் சொன்னால் மக்களின் பாதுகாப்பிற்கு உரிய செய்தியாக இருக்கும்., முடிந்தால் ஒளிபரப்புங்கள் மக்களிடத்தில் நன்மை கிடைக்கும் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Tags

Next Story