மாரியம்மாள் குளத்தில் மாதா கோயில் திருவிழா

மாரியம்மாள் குளத்தில் மாதா கோயில் திருவிழா
X

மாரியம்மாள் குளத்தில் நடைபெற்ற  மாதா கோயில் திருவிழா தேர் பவனி

சமயநல்லூர் மாரியம்மாள் குளத்தில் மாதா கோயில் திருவிழா சப்பர தேர் பவனி நடைபெற்றது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ,மரியம்மாள் குளத்தில் உள்ள காணிக்கை மாதா கிறிஸ்தவ ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, ஏழு நாட்கள் காணிக்கை மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காணிக்கை மாதா, மெக்கேல், சமனேஷ் , சப்பரங்கள், வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் மாதா ஊர்வலமாக;் சென்று மக்களுக்கு காட்சியளித்தார். இதில் மக்கள் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, உப்பு மிளகு, ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தினர். சுற்றுவட்டாரங்கள், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!