உசிலம்பட்டி அருகே சீரான மின்சாரம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்
உசிலம்பட்டி அருகே சாலை மறியல் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
உசிலம்பட்டி அருகே 100 கே வி டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கருமாத்தூரில் கேசம்பட்டி எஸ் எஸ் -3.100 கே வி டிரான்ஸ்பார்மர் மூலம் வடக்கம்பட்டி, வடக்கம்பட்டி காலனி, பாலூத்துப்பட்டி, இந்திரா நகர், மும்மூர்த்திபட்டி, திருவள்ளுவர் காலனி, கழுவனாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மேலும், இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட விவசாய பம்ப்செட் மின்மோட்டார்களுக்கும் மின்சாரம் வழங்குவதால் அடிக்கடி மின் பற்றாக்குறை ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
இந்த மின்பற்றாகுறையை, நிவர்த்தி செய்வதற்கு மேலும் , 100 கே வி டிரான்ஸ் பார்மர் வைக்க செக்காணூரணி மின்சார வாரியத்தில் தொடர்ந்து, மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் , சாலை மறியல் போராட்டம் நடக்கப் போவதாக அறிவித்த நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத சூழலில் 100 க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் மற்றும் பொதுமக்கள் மாவட்டமின்சார வாரியம், செக்கானூரணி உதவியின் மின் பொறியாளர் அலுவலகத்தை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனால்,போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கருமாத்தூரில் மதுரை- தேனி செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால்,இப்பகுதியில்சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu