மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் தற்காப்பு கலை போட்டிகள்

மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் தற்காப்பு கலை  போட்டிகள்
X

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மைதானத்தில் வளரி கலை போட்டிகள் குறித்து தேசிய அளவிலான முப்பெரும் விழாவில் பங்கேற்றோர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மைதானத்தில் வளரி கலை போட்டிகள் குறித்து தேசிய அளவிலான முப்பெரும் விழா நடந்தது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை காமராஜர் பல்கலைக்கழக மைதானத்தில், போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான முப்பெரும் விழா நடைபெற்றது.

பல்கலைக்கழகம் தமிழியல் துறை தமிழ் பண்பாட்டு மரபுச் செல்வம் நடுவம் இன்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் வளரி கலை போட்டிகள் நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக, துணைவேந்தர் பேராசிரியர் குமார் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் துறை தலைவர் பேராசிரியர் போ. சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவு தலைமை தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:

வளரி கலை மதுரை மாவட்ட செயலாளர் முத்துமாரி, வளரிகலை ஆய்வு மற்றும் பயிற்சி மைய இயக்குனர் கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், 3 வயது முதல் 19 வரையிலான இளம் வளரி கலை மாணவ, மாணவிகள் வளரிபயிற்ச்சியில் சிறப்பாக செய்து தாங்கள் திறமை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினர் கூட்டுறவு சங்க தலைமை தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளான சிலம்பம் , வளரி போன்றவை ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது.

சிலம்பம் மட்டும் தற்போது தற்காப்புக் கலையாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அழிந்துபோன வளரிகளை புத்துணர்வு அளிக்கும் விதமாக தற்போது மதுரையில் முத்துமாரி கார்த்திக் ராஜா போன்றோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதனால் நமது பாரம்பரிய வீர கலையான வளரி வளர்ந்து வீரத்தை பறைசாற்றும் விதமாக அமைகின்றது.

சுதந்திர போராட்ட காலத்தில் மருது பாண்டியர்கள், பெருங்காமநல்லூர் மக்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வளரியை பயன்படுத்தியதை ஆங்கிலேய அரசு தடைசெய்தது.தற்போது வளரியை மரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் தயார் செய்து பயிற்சி அளிக்கின்றனர். முத்துமாரி முயற்ச்சியால் மீண்டும் இக்கலை வளர்ச்சியடையும் தமிழர்களின் பாரம்பரியம் வெளி உலகத்திற்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்றார் ராஜேந்திரன்.

மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் குமார் கூறியதாவது: நமது தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வளரி போன்றவை மறைக்கப்பட்டு இருந்ததை மீட்டெடுக்கும் முயற்சியாக தற்போது, இந்த கலை பரவலாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதவும் விதமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் காவல்துறையினர் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உறுதுணையாக இருக்கும்.

இதில், சில தொழில்நுட்ப விதிகள் காவல்துறையிடம் உள்ளதால், முறைப்படி காவல்துறையிடம் அனுமதி பெற்று அதற்கான வழிகளை தேர்வு செய்து பயிற்சியில் ஈடுபட உள்ளோம் . வளரி கலையை.பயிற்சி அளிக்க இடம்,மற்றும் ஆலோசனைகள் மதுரைகாமாராஜர் மதுரை காமராஜர் பல்கலைகத்தில் ஏற்பாடு செய்ய தயராக உள்ளோம் என்றார் துணை வேந்தர்.

.

Tags

Next Story
ai in future agriculture