மதுரை பெரியார் பஸ் நிலைய பணிகள் விரைவில் முடியும்: மாநகராட்சி ஆணையர்

பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் லிப்ட், எக்ஸலேட்டர், நடைப்பாதை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும், மேம்பாட்டு பணிகளை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்க மேற்கூரை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், பேருந்து நிலையத்தில் 57 நகரப் பேருந்துகள் நிறுத்துவதற்கான நிறுத்தப்பகுதிகளும், தரைத் தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களும் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளில் 462 கடைகளும் கூடிய வணிக வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரியார் பேருந்து நிலையத்திற்குள் நகரப்பேருந்துகள் சிரமமின்றி வந்து செல்வதற்கான இட வசதிகள் குறித்தும், பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் லிப்ட், எக்ஸலேட்டர், நடைப்பாதை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ,மழைநீர் சீராக செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, நகரப் பொறியாளர் (பொ)சுகந்தி, செயற் பொறியாளர் கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன்,ஆரோக்கிய சேவியர், உதவிப்பொறியாளர் ஆறுமுகம் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!