மதுரையில் மழையால் சாலையில் குளம் போல தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதி

மதுரையில் மழையால் சாலையில்  குளம் போல தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதி
X

மதுரை தாசில்தார் நகர், அன்பு மலர் தெருவில் வெளியேறும் கழிவு நீர்.

மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர் சுகாதாரப் பிரிவுக்கு இப்பதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

மதுரையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீரால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் பெய்த மழையால், பல சாலைகளில் கழிவு நீரும் மழை நீரும் குளம் போல தேங்கியுள்ளன. மதுரை நகரில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது.

இதை தணிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம், அழகர் கோவில், கருப்பாயூரணி, வரிச்சூர், வண்டியூர், மேலமடை, திருப்பரங்குன்றம், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால், மதுரை அண்ணா நகர், கோமதிபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து குளம் போல தேங்கியுள்ளன.

மதுரை தாசில்தார் நகர், அன்பு மலர் தெரு, வீரவாஞ்சி தெரு ,காதர் மைதீன் தெரு ஆகிய தெருக்களில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பலன்கள் சரிவர மூடப்படாமல் உள்ளதால், அப்பகுதியில் உள்ள கழிவு நீர் சாலையைப் பெருக்கெடுத்து குளம் போல தேங்கியுள்ளன.அன்பு மலர் தெருவில், பாதாள சாக்கடை மூடி யானது சரிவர மூடப்படாமல் கழிவுநீர் பீறிட்டு வெளியேறுகிறது. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதியில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து, மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர் சுகாதாரப் பிரிவுக்கு இப்பதி மக்கள் புகார் தெரிவித்தும், மதுரை மருதுபாண்டி தெருவில் தேங்கியுள்ள நீரையும் காதர் மொய்தீன் தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரையும், மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை என அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இப்பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், மற்றும் ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்து, சாலைகளில் தேங்கும் கழிவு நீரை மழை நீரையும் அகற்ற ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business