மதுரை பாலமேடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற பாஜக சிறப்பு ஆலோசனைக்கட்டத்தில் பங்கேற்ற மாநிலத்தலைவர் அண்ணாமலை
பாலமேட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் :
மதுரை மாவட்டம், பாலமேடு கஜேந்திரன் வளாகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மாவட்டத் தலைவர் மகேந்திரன்கோவிந்த மூர்த்தி மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை தொழிலதிபரும் திரைப்பட நடிகருமான, மறவபட்டி கே.ஜி. பாண்டியன், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வீரவாள் கொடுத்து வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, மாநிலத் தலைவர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமரன், ஒன்றிய தலைவர்கள் தங்கதுரை, சுபாஷ் சந்திரபோஸ், உள்ளிட்ட வட்டார ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu