ரெண்டு மாசமா சம்பளம் வரலே... - மதுரை காமராசர் பல்கலை., ஊழியர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை காமராசர் பல்கலை., ஊழியர்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அலுவலர்கள் இரண்டு மாத ஊதியம் வழங்க கோரி காந்தி ஜெயந்தி முன்னிட்டு காந்தி படத்திற்கு மாலையிட்டு காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதியர்களுக்கான சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை.
தமிழக அரசு பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத் தொகை 58 கோடியில் இருந்து 8 கோடியாக குறைத்தது. இதனால்,நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.அதனைத் தொடர்ந்து,நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது, ஜூலை மாதம் வழங்க வேண்டிய சம்பளம் ஆகஸ்ட்மாதம் வழங்கப்பட்டது. இரண்டு மாதத்திற்கான சம்பளம் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மூன்றாவது மாதமும்பிறந்து விட்டதால் நிதி நெருக்கடியில் ஆசிரியர்கள் அலுவலர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசு ஆளுநருக்கு பல்வேறு கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்,கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் அலுவலர்கள் ஓய்வுஊழியர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில், ஆசிரியர் அலுவலக கடந்த 20 நாட்களுக்கு மேலாகதொடர் போராட்டம் நடைபெறுவது பெரும் சர்ச்சையை கிளப்பிஉள்ளது .இதுதொடர்பாக ,உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் தலையீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu