மதுரை மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழுக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் : அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்
மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
குழுத் தலைவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, விருதுநகர் எம்பி மாணிக்தாகூர், தேனி எம்.பி., ரவீந்திரநாத், மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu