மதுரை அருகே பத்திர எழுத்தர்கள் அலுவலகங்களை மூடி போராட்டம்

மதுரை அருகே பத்திர எழுத்தர்கள் அலுவலகங்களை மூடி போராட்டம்
X

சார்பதிவாளர் அலுவலகம்( பைல் படம்)

கிராமமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக உசிலம்பட்டி பகுதியில் பத்திர எழுத்தர்கள் தங்களது அலுவலகங்களை மூடி போராட்டம் நடத்தினர்

உசிலம்பட்டியில் பத்திர எழுத்தர்கள் அலுவலகங்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீமானுத்து,, தொட்டப்பநாயக்கணூர், நக்கலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதிகளில் உள்ளதால் அவை காப்பு காடுகள் பகுதியாக பதிவேட்டில் உள்ளது. இந்த நிலங்களை அவரச தேவைக்காக குறைவான அளவில் பிரித்து விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், காப்பு காடுகள் பகுதி என்பதை அரசு விடுவித்து தர தொடர்ந்து கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வரும் சூழலில்.,கிராம மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பத்திர எழுத்தர்கள் ஒன்றிணைந்து தங்களது அலுவலகங்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story