மதுரை அருகேயுள்ள கிராமங்களுக்கு புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் தொடக்கி வைப்பு

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5- கிராமங்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மதுரை மின்பகிர்மான வட்டம் (ஊரகம்) சார்பில் ரூ.32.31 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மதுரை மின்பகிர்மான வட்டம் (ஊரகம்) சார்பில், கொடிமங்கலம் கிராமத்தில் ரூ.7.8 லட்சம் மதிப்பீட்டில் 210 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ.விநியோக மின்மாற்றியையும், ஆலாத்தூர் கிராமம் என்.எம்.எஸ் நகரில் ரூ.7.9 லட்சம் மதிப்பீட்டில் 140 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின் மாற்றியையும்,
தவிட்டாம்பட்டி கிராமத்தில் ரூ.4.53 லட்சம் மதிப்பீட்டில், 160 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின்மாற்றியையும், முசுண்டகிரிபட்டி கிராமத்தில் ரூ.6.62 லட்சம் மதிப்பீட்டில் 190 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின்மாற்றியையும், இளமனூர் கிராமத்தில் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் 255 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின்மாற்றியையும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூர்யகலா, உதவி இயக்குநர் (உராட்சிகள்) பி.செல்லதுரை, எஸ்.வெண்ணிலா, தலைமை பொறியாளர், எஸ்.மங்கள நாதன், மேற்பார்வை பொறியாளர் ராஜா காந்தி, செயற் பொறியாளர், ஆறுமுகராஜ், கிழக்கு வட்டாட்சியர் பாண்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu