மதுரை அருகே பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை : போலீசார் பறிமுதல்

மதுரை அருகே பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை :  போலீசார் பறிமுதல்
X
உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைக்காரர்களிடம் இருந்துஅரிசி, கோதுமையை வாங்கிவந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது

மதுரை அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூடைகளை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளர் கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.

மதுரை அருகே ஐராவதநல்லூர் சுண்ணாம்புக் காளவாசல் பின்புறம் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூடைகளை கடத்தி வைத்திருப்பதாக, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ,போலீசார் அந்த குடோனில் சோதனை செய்தனர். அப்போது ,அங்கு 319 மூடைகளில் இருந்த 15. 95 டன் ரேஷன் அரிசி மற்றும் 92 மூடைகளில் 4.6 டன் கோதுமையையும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து , குடோன் உரிமையாளரான முத்து என்ற கொரில்லா முத்து கைதுவை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவர் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைக்காரர்களிடம் இருந்து இந்த ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை வாங்கிவந்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ,ரேஷன் கடை விற்பனையாளர்களான மகாராஜன், மணி, பழனி, ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!