நகைக்கடனில் உரிய ஆய்வு செய்து சலுகை வழங்கப்படும்: அமைச்சர் இ.பெரியசாமி
தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை பற்றி நன்றாக அறிந்த காரணத்தால் கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளை கண்டுபிடித்துள்ளதாக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.:
திண்டுக்கல் செல்வதற்காக, சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட நேர்முகத் தேர்வு பணி நியமனம் செய்யப்பட வில்லை. அடுத்த மாதம் மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
பயிர்க்கடனில் ஏற்கெனவே, 2393 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. அதை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். அதேபோல, நகைக் கடன்களிலும் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. 6,000 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி , தகுதி உள்ளவர்களை ஆய்வு செய்து தள்ளுபடி சலுகை வழங்கப்படும். திருமங்கலத்தை அடுத்த பாப்பையாபுரத்தில் மூக்கையா என்பவர் பல முறை நகை கடன் வாங்கியுள்ளார். இதுபோன்று நகை கடனில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஆய்வு செய்து, 5 பவுன் நகை அடகு வைத்துள்ள உண்மையான ஏழை எளிய மக்ககளுக்கு கண்டிப்பாக தள்ளுபடி கிடைக்கும்.
முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் தனக்கு கூட்டுறவு துறையைப்பற்றி ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார். ஆனால், கூட்டுறவுத்துறையைப்பற்றி நன்றாக தெரிந்ததனால் தான் இவ்வளவு தூரம் ஆய்வு செய்து தவறுகளை கண்டுபிடித்துள்ளோம். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தலைச்சந்திக்க எப்போதும் திமுக தயாராக உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu