மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் கஞ்சா பதுக்கிய  பெண் கைது
X
நாகமலைபுதுக்கோட்டை பகுதியில், கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தபோது, ஆலம்பட்டி எனும் பகுதியில் ஜெயா என்ற பெண் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

ஜெயாவை கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், அவரிடமிருந்து, 10கிலோ கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்து, கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்படுகிறது. யார் கஞ்சாவை சப்ளை செய்கிறார். எந்தந்த பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
the future with ai