மதுரை அருகே சந்தன, சீலக்காரி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்..!

மதுரை அருகே சந்தன, சீலக்காரி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்..!
X

மதுரை ,உசிலம்பட்டி அருகே கோயில்  கும்பாபிஷேகம்.

உசிலம்பட்டி அருகே , முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் மற்றும் சீலக்காரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கோயில் கும்பாபிஷேகம்

மதுரை உசிலம்பட்டி அருகே , முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் கோயில் மற்றும் சீலக்காரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பூச்சிபட்டி - மாலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் திருக்கோயில் , இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு செய்து, முத்தாலம்மனுக்கும், சந்தனமாரியம்மனுக்கும் சுமார் 51 அடி உயரம் கோபுரம் எழுப்பி இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகளை துவங்கி மூன்று கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாவதி யாகம் முடிந்ததும் கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து கருவறையில் உள்ள முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் பீடத்தில் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் மாலைப்பட்டி, பூச்சிபட்டி, வாடிக்கோவில்பட்டி, பேச்சியம்மன்கோவில்பட்டி, தொட்டப்பநாயக்கணூர், இடையபட்டி, சடையாண்டிபட்டி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்.

இதே போன்று தொட்டப்பநாயக்கனூர் அருகே உள்ள சேர்வைபட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சீலக்காரியம்மன் கோயிலில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பின் கோவில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 21 அடி உயரத்தில் கோபுரம் எழுப்பி இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

இந்த இரு கிராமங்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பொது மக்களுக்கு கோயில் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story