மதுரை அருகே ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை :போலீசார் விசாரணை

kidnapped person murdered police enquiry
மதுரை செக்கானூரணி அருகே உள்ளநடுமுதலைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (60.இவர் அப்பகுதியில் டீ - கடை நடத்தி வருகிறார்
இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்ற கருப்பையாவை வழிமறித்த கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று பன்னியான் என்ற கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு அவரை வெட்டிப்படுகொலை செய்து உடலை கண்மாயில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.சம்பவம் அறிந்த செக்காணுரனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்தும் , குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முன்பகை காரணமாக கருப்பையா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu